டெர்ப்ஸ் அகாடமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேலாண்மை துறையின் சார்பில் (30.01.2020) அன்று “தன்னம்பிக்கையை வளர்ப்பது” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஈரோடு ஸ்ரீ வாசவி கல்லூரியின் B.COM (PA) துறைத்தலைவி முனைவர்.S.பழனியம்மாள் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இன்றைய மாணவர்கள் பயமின்றியும், கவலைகள் இன்றியும் மகிழ்ச்சியாக வாழ தன்னம்பிக்கை மிகமிக அவசியமென்று மாணவர்கள் மனதில் பதிய வைக்க பல உதாரணங்களுடன் விரிவுரையாற்றினார்.
இக்கருத்தரங்கில் மேலாண்மை துறைத்தலைவி திருமதி.V.பிரபாவதி அவர்கள் வரவேற்புரையும், நன்றியுரையை திரு.P.மகேஷ்வரன் அவர்களும் வழங்கினார். மேலும் இக்கருத்தரங்கிற்கு இயக்குனர் திரு.இளங்குமரன் அவர்களும்,முதல்வர் முனைவர் ஆனந்தமுருகன் அவர்களும் தலைமை தாங்கினார்.மேலாண்மைத் துறை மாணவ மாணவியர்களும் உதவி பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கை அத்துறை பேராசிரியர்களான திருமதி.M.G. பானுமதி அவர்களும் செல்வி V.அனிதா அவர்களும் ஏற்பாடு செய்தனர்.