டெர்ப்ஸ்அகாடமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் குழு (EDC) (04.02.2020) துவக்க விழா இனிதே நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக Paragon innovation உரிமையாளர் திரு.M.S. பாலகணேசன் அவர்களும் Fetherss Retail Outlet உரிமையாளருமான திருமதி. B.நித்யநந்தினி பாலகணேசன் அவர்களும் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர்.
திரு.M.S. பாலகணேசன் அவர்கள் Innovation Entreprenur என்ற தலைப்பில் ஒவ்வொருவரும் தொழில் தொடங்கும் முன் அத்தொழிலை பற்றி முழு ஆராய்ச்சி செய்த பிறகும் தன்னை ஊக்குவிப்பவர்களை உடன் வைத்தும் வாடிக்கையாளைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்களை உருவாக்குவதிலும், போட்டியாளர்களை விட சிறந்த தரமான பொருட்களை தேவையான நேரத்தில் நியாமான விலையில் அவர்களை திருப்திபடுத்தும் விதமாக அமையும் தொழிலை நெடுங்காலம் நீடித்திருக்கும் என்றும் பணத்திற்காகவும் புகழுக்காகவும் தொழிலை தொடங்காமல் மக்களின் திருப்திக்கும் நாட்டின் முன்னேறத்திற்காகவும் தொழில் துவங்குமாறு மாணவ மாணவியர்களிடையே உணர்ச்சி பூர்வமாக உரையாற்றினார்.
திருமதி.B.நித்யநந்தினி பாலகணேசன் அவர்கள் Women Entreprenur என்ற தலைப்பில் காலங்காலமாக பெண்கள் சிறு தொழில் செய்தும் கூட குடும்பத்தை வழிநடத்தி சென்றனர். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் கற்ற கல்வியின் மூலமாகவும் கிடைத்த அனுபத்தின் மூலமாகவும் ஆணுக்கு நிகராக தொழில் துவங்கி முன்னேறி வருகின்றனர் என்றும் பெண்களை ஊக்கப்படுத்தி தொழில் துவங்க நிறைய குழுக்களும், மத்திய மாநில அரசுகளும் உதவி புரிகிறது என்று சிறப்புரையாற்றினார்.
மேலும் இவ்விழாவில் சிறப்புரை கல்லூரி முதல்வர் முனைவர் பொன்.ஆனந்தமுருகன் அவர்களும், வாழ்த்துரையாக கல்லூரி இயக்குனர் திரு.பா.இளங்குமரன் அவர்களும் சிறப்பித்தனர். இவ்விழாவை EDC ஒருங்கிணைப்பாளர் திருமதி. M.G.பானுமதி மேலாண்மைத்துறை உதவி பேராசிரியர் ஏற்பாடு செய்திருந்தார். மேலும் இவ்விழாவில் அனைத்து துறை மாணவ மாணவியர்களும் உதவி பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்

- 05 Feb
- 2020