டெர்ப்ஸ்அகாடமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “நுண்கலை மற்றும் தூவல் தமிழ் மன்றங்களின்” சார்பில் (31.01.2020) அன்று“மாதாந்திர நிகழ்வாக மெகந்தி & திருப்பாவை ஒப்புவித்தல்” போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக குமார் நகர் அரசு மேல்நிலைப் பள்ளி வணிகவியல் ஆசிரியர் செல்வி.M.வளர்மதி அவர்கள் வருகை புரிந்தார். சிறப்பு விருந்தினர் தனது உரையில், மாணவர்கள் தங்களது வாழ்கையை மேம்படுத்திக் கொள்ளுதல், பொது வாழ்வில் ஈடுபடுதல், ஏழை எளிய மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்தல், வெளிப்புறத் தோற்றதைக் கண்டு எதையும் தீர்மானிக்க கூடது, ஆராய்ந்து அறிந்த பின் தான் தீர்மானிக்க வேண்டும் என்பதை மாணவர்களுக்கு ஆர்வம் ஊட்டும் வண்ணம் எடுத்துரைத்தார். இறுதியாக கலைநிகழ்ச்சியும் , வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

- 31 Jan
- 2020