டெர்ப்ஸ் அகாடமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு” என்ற தலைப்பில் கருத்தரங்கம் (06.02.2020) அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நமது கல்லூரியின் முன்னாள் மாணவி செல்வி.B.கோகிலாதேவி வழக்கறிஞர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர் தனது உரையில், இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் பற்றியும், அதற்கான சட்ட நடவடிக்கைகள் பற்றியும் மேலும் சமமான சொத்துரிமை திட்டங்கள் பற்றியும் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை உண்டாக்கும் வகையில் சிறப்புரையாற்றினார்.

- 06 Feb
- 2020